“உங்க மையிண்ட்ல குரூப்பிசம் இருக்கு” : ரம்யா பாண்டியன் – ரியோ இடையே மோதல் !

by Web Team
0 comment

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய நாள்முதல் பிரச்சினைக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. நேற்றைய நிகழ்ச்சியில் நாடா? காடா? டாஸ்கில் ஷனம் ஷெட்டியை சுரேஷ் தாக்கி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஷனம் சுரேஷை வெளுத்து வாங்கினார். அத்துடன் சுரேஷ் ஷனத்திடம் ஹவுஸ்மேட்ஸ் மத்தியில் மன்னிப்பு கேட்டார். பின்பு இந்த விவகாரம் பிக் பாஸ் வரை பஞ்சாயத்திற்கு சென்றது.

இந்நிலையில் 18 ஆம் நாளான இன்று வெளியாகியுள்ள முதல் ப்ரோமோவில், டைனிங் டேபிளில் ஹவுஸ்மேட்ஸ் அமர்ந்து சாப்பிடுகின்றனர். அப்போது ரியோ, எல்லாரும் ஒரு 10 நிமிஷம் ஒண்ணா உட்காந்து சாப்பிடலாம்ல, நான் ஷிவானி, ரம்யா, ஆஜித்தை கூப்பிட்டேன்.


திரும்ப திரும்ப குரூப்பிசம்ன்னு ஒன்னு சொல்லுறாங்க என்று சொல்கிறார். அதற்கு ரம்யா நீங்க குரூப்பிசத்தை மையிண்ட்ல வச்சிட்டு சொல்லுறீங்க என்று சொல்ல, அதற்கு ரம்யா நீங்க தான் சொன்னீங்க; நான் சொல்லல என்று கூறும்படியாக ப்ரோமோ வீடியோ முடிகிறது.

Related Posts

Leave a Comment