சோசியல் மீடியாவில் என்ட்ரி கொடுத்த சிம்பு… வெளியான மிரட்டல் லுக்கை கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள்!

by Web Team
0 comment

நடிகர் சிம்பு டிவிட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத கதாநாயனாக இருந்து வந்த சிம்பு பின்பு அதிலிருந்து சரியத் தொடங்கினார். படப்பிடிப்புகளில் கலந்துகொள்ளாததால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக எந்தப் படத்திலும் தோன்றாமல் இருந்தார். பின்னர் மீண்டும் ‘மாநாடு’ படத்தில் நடிக்க இருப்பதாகத் தெரிவித்தார்.

தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்து வருகிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு திண்டுக்கல் பகுதியில் அக்டோபர் 8-ம் தேதி தொடங்கி மும்மரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

இதுவரை எந்த சமூக வலைத்தளத்திலும் இல்லாத சிம்பு தற்போது அனைத்து சமூக வலைத்தளங்களிலும் அதிகாரபூர்வமாக நுழைந்துள்ளார். இன்று காலை 9.09 மணிக்கு டிவிட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ‘Silambarasan TR’ என்ற பெயரில் அதிகாரபூர்வ கணக்குகள் துவங்கியுள்ளார். மேலும் சிம்புவின் எடை குறைப்பு பயணம் பற்றிய காட்சிகள் அடங்கிய விடியோவும் அந்த சமூக வலைத்தள கணக்குகளில் வெளியாகியுள்ளது.

இதையடுத்து சிம்புவின் ரசிகர்கள் சிம்புவின் என்ட்ரியைக் கொண்டாடி வருகின்றனர். சுசீந்திரன்-சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

Related Posts

Leave a Comment