ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!

by Web Team
0 comment

ஓகேனக்கல் சுற்றுலா தலத்தில் 7 மாதத்துக்கு பின் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


தருமபுரி மாவட்டம் ஓகேனக்கல் சுற்றுலா தலம் கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. கொரோனா பரவலால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் திறக்கப்பட்ட போதும் ஓகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், 7 மாதங்களுக்கு பிறகு ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மலர்விழி அனுமதி அளித்துள்ளார். சின்னாறு முதல் கோத்திக்கல், மெயின் அருவி வரை பரிசல் இயங்கவும், ஒகேனக்கல் அருவியில் இன்று முதல் குளிக்கவும், மசாஜ் செய்யவும் அனுமதி வழங்கியுள்ளார். மேலும், மக்கள் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் பாதுகாப்பாக சுற்றுலா செல்லுமாறு ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts

Leave a Comment