பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் பதவியை விலகுகிறாரா?

by Lankan Editor
0 comment

பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில், பெயர்குறிப்பிடாத நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் வெளியிட்ட தகவலை மேற்கோள்காட்டி, டேப்ளாய்ட் தி டெய்லி மிரர் இந்தச் செய்தியினை வெளியிட்டுள்ளது.

சம்பளத்தை காரணம் காட்டி பொரிஸ் ஜோன்சன், அடுத்த ஆண்டு தன் பதவியை இராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆண்டிற்கு 150,402 பவுண்ட் சம்பளமாக பெறும் பொரிஸ் ஜோன்சன், அது தனக்கு போதுமானதாக இல்லை எனவும், அதைக்கொண்டு வாழ முடியாது எனவும் கூறியுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கன்சர்வேட்டிவ் கட்சித் தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்னர் பொரிஸ் ஜோன்சன், மாதத்திற்கு 23,000 பவுண்ட் சம்பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலேயே, பொரிஸ் ஜோன்சன் அடுத்த ஆண்டு தனது பதவியை இராஜினாமா செய்யத் திட்டமிட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts

Leave a Comment