மலையக உதவி ஆசிரியர்களக்கு விரைவில் நிரந்தர நியமனம் – ஜீவன் தொண்டமான்

by Lankan Editor
0 comment

மலையக உதவி ஆசிரியர்களுக்கு எதிர்வரும் 23ஆம் திகதி நிரந்தர நியமனம் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் மத்திய மாகாண ஆளுநருக்கும் இடையில் நடைபெற்ற தொடர் பேச்சுவார்த்தைகளின் பயனாக இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.

நீண்ட காலமாக மத்திய மாகாணத்தில் உதவி ஆசிரியர் நிரந்தர நியமனம் தொடர்பாக நிலவிவந்த பிரச்சினைகள் தொடர்பாக மத்திய மாகாண தமிழ் கல்வி ஒருங்கிணைப்பாளர் கணபதி கனகராஜ் ஆகியோர் இராஜாங்க அமைச்சரின் கவனத்துக்கு கொண்டுவந்தனர்.

Related Posts

Leave a Comment