கொரோனா வைரஸ் தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 80பேர் உயிரிழப்பு

by Editor
0 comment

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 18ஆயிரத்து 804பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 80பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகில் கொரோனா தொற்றினால் அதிக பாதிப்பை எதிர்கொண்ட நாடுகள் பட்டியலில் 11ஆவது நாடாக பிரித்தானியா விளங்குகிறது. மேலும் கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை மொத்தமாக ஏழு இலட்சத்து 41ஆயிரத்து 212பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 43ஆயிரத்து 726பேர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன் மருத்துவமனைகளில் வைரஸ் தொற்றினால் அனுமதிக்கப்பட்டுள்ள 592பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Related Posts

Leave a Comment