கொரோனா பரவலைத் கட்டுப்படுத்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உதவியது – மோடி

by Editor
0 comment

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கையைக் குறைப்பதற்கு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு தான் உதவியதாக நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பில் கேட்ஸ் மற்றும் மெலின்டா கேட்ஸ் அறக்கட்டளை நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து பேசிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “கொரோனா பரவலை கட்டுப்படுத்த உலகில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை முதன்முதலில் அமல்படுத்திய நாடுகளில் இந்தியாவும் ஒன்று.

கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இந்தியா முன்னனியில் உள்ளது. அந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைவருக்கும் விநியோகம் செய்யப்படுவதற்கான ஏற்பாடுகள் நடைபெறும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts

Leave a Comment