எனது கணவரே எனக்கு மகனாக பிறந்துள்ளார்”-நடிகை மேக்னா ராஜ் உருக்கம்

by Web Team
0 comment

நடிகை மேக்னா ராஜ் அவர்களுக்கு ஆண் குழந்தைப் பிறந்துள்ளது.

கன்னட திரையுலகின் இளம் கதாநாயகனாக வலம் வந்தவர் சிரஞ்சீவி சார்ஜா இவரும் நடிகை மேக்னா ராஜ் அவர்களும் 10 ஆண்டுகளாக காதலித்து வந்து கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

இந்த நிலையில் கடந்த ஜூன் 7ம் தேதி நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்,இளம் வயதிலே சிரஞ்சீவி சார்ஜா உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமீபத்தில் தான் நடிகை மேக்னா ராஜ் அவர்களுக்கு வளைகாப்பு நடைபெற்றது,அந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் அவரது கணவரான சிரஞ்சீவி சார்ஜா அவர்களின் உருவப்படம் வைத்து நிகழ்ச்சியை நடத்தினர்,மேலும் ரசிகர்கள் சிரஞ்சீவி சார்ஜா அவர்கள் மேக்னா ராஜை தாங்கிப்பிடிப்பது போன்ற புகைபடத்தை வெளியிட்டு நெகிழவைத்தனர்.

இந்த நிலையில் மேக்னா ராஜ் அவர்ளுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது,இதனை தனது குடுமபத்துடன் தனது மகழ்ச்சியை பகிர்ந்த மேக்னா ராஜ் அவர்கள் கூறுகையில்,”தனது கணவரே தனக்கு மகனாக பிறந்துள்ளார்,வாழ்த்துக்கள் கூறிய ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்”.

ஆண் குழந்தைகாக ரூ 10 லட்சம் வெள்ளி தொட்டில் வாங்கியுள்ளார்களாம்.

 

Related Posts

Leave a Comment