மில்லியன் கணக்கான ரசிகர்களின் இதயத்தை நெகிழ வைத்த சுரேஷ் சக்கரவர்த்தியின் கண்ணீர்! தீயாய் பரவும் காட்சி

by Web Team
0 comment

தமிழில் தொடங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக 4-வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது.

முதல் சீசன் அளவுக்கு அடுத்து வந்த இரண்டு சீசன்களும் இல்லை என புலம்பிய ரசிகர்கள், இந்த சீசன் நன்றாக இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சுரேஷ் சக்கரவர்த்திக்கு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு பெருகி வருகிறது.

நேற்று பிக்பாஸ் வீட்டில் சனம் ஷெட்டி தலையில் தெரியாமல் சுரேஷ் அடித்துவிட அந்த விவகாரம் பெட்ரோல் எதுவும் ஊற்றாமலேயே பற்றி எரிந்தது. சுரேஷ் வீட்டுக்குள் போய்விட வெளில வாடா என சனம் சவுண்ட் கொடுத்த காட்சி தான் நேற்று இணைய சென்சேஷன். பலமுறை மன்னிப்பு கேட்டுவிட்டாலும் கன்பெக்ஷன் ரூமிற்கு ஒருமுறை சென்று சுரேஷ் மன்னிப்பு கேட்டார்.

அப்போது அவர் அழுதது பரிதாபமாக இருந்தது. இதுவரை கிண்டலும், கேலியுமாக இருந்த சுரேஷ் முதல்முறையாக நேற்று குமுறிக்குமுறி அழுதார்.
தொடர்ந்து பிக்பாஸிடம் பேசிய அவர்,” பிக்பாஸ் நான் செஞ்சது தப்பு. என்ன இந்த வீட்டைவிட்டு வெளியில அனுப்பிருங்க,” என கோரிக்கை விடுத்தார். பதிலுக்கு பிக்பாஸ் நீங்கள் மனதார மன்னிப்பு கேட்டு விட்டீர்கள். உங்களுக்குள் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்,” என ஆறுதலாக பேசினார்.
சனத்திற்கு எதிராக நெட்டிசன்கள் பல வீடியோக்களை ட்ரோல் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Related Posts

Leave a Comment