குருப்பெயர்ச்சி பலன்கள் 2020-21-ல் அனைத்து ராசிகாரர்களும் காத்திருக்கும் அதிர்ஷ்டம் என்ன?

by Web Team
0 comment

குருப்பெயர்ச்சியில் குருவானவர் மிதுன ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் இருந்து எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி அடைகின்றார்.

குருதேவர் தான் நின்ற இடத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக மிதுன ராசிக்கு அயன சயன போக ஸ்தானமான பனிரெண்டாம் இடத்தையும், ஏழாம் பார்வையாக குடும்ப ஸ்தானமான இரண்டாம் இடத்தையும், ஒன்பதாம் பார்வையாக சுகஸ்தானமான நான்காம் பாவகத்தை பார்க்கின்றார்.

வீடு, மனை போன்ற செயல்பாடுகளில் இருந்துவந்த காலதாமதங்கள் நீங்கி எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் இருந்துவந்த குறைபாடுகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள்.

வாகனம் தொடர்பான செயல்பாடுகளில் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். விளையாட்டு சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முயற்சிக்கேற்ற பாராட்டுகளும், மதிப்புகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.

வியாபாரிகளுக்கு :

கூட்டுத்தொழில் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் சற்று நிதானத்துடன் செயல்பட வேண்டும். எண்ணெய் வித்துக்கள் தொடர்பான பணிகளில் இருப்பவர்கள் கொடுக்கல், வாங்கல் செயல்பாடுகளில் சிந்தித்து செயல்பட வேண்டும்.

வேலையாட்களிடம் சூழ்நிலைக்கு ஏற்றவாறு தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

மாணவர்களுக்கு :

அடிப்படைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வியில் ஈர்ப்பும், ஈடுபாடும் அதிகரிக்கும். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆசிரியர்களின் அரவணைப்பும், ஒத்துழைப்பும், மனதிற்கு புதிய நம்பிக்கையையும், மதிப்பெண்களையும் உருவாக்கித்தரும்.

விவசாயிகளுக்கு :

நீர்ப்பாசன நிலை சிறப்பாக இருக்கும். வாழை, கரும்பு, மஞ்சள் போன்றவற்றை பயிரிட்டவர்கள் அதற்கு உகந்த மருந்துகளை பயன்படுத்துவதன் மூலம் விளைச்சலை அதிகப்படுத்த முடியும்.

வரப்பு தொடர்பான பிரச்சனைகளை நிதானமாக கையாளுவதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்க இயலும்.

அரசியல்வாதிகளுக்கு :

பொதுமக்களிடம் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனம் வேண்டும். புதிய தொழில்நுட்ப கருவிகளை பயன்படுத்தும்போது தகுந்த ஆலோசனைகளை பெற்று பயன்படுத்தவும்.

கட்சி நிமிர்த்தமான உயர் பதவியில் இருப்பவர்கள் நிதானத்தை கையாள வேண்டும். முயற்சிக்கேற்ற பலன்கள் சற்று காலதாமதமாக கிடைக்கப் பெறுவீர்கள்.

வெளியூர் மற்றும் வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்பவர்கள் தாங்கள் நினைத்த செயலை முடிப்பதில் காலதாமதம் நேரிடலாம்.

புதிய தொழில்நுட்பத்தை பற்றிய ஆலோசனைகளும், லாபங்களும் கிடைக்கப் பெறுவீர்கள். விலகி சென்ற நெருக்கமானவர்கள் மீண்டும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம்.

வழிபாடு :

வியாழக்கிழமைதோறும் மஞ்சள் பூக்களை கொண்டு குருமார்களை வழிபாடு செய்துவர சுபகாரியம் மற்றும் தொழிலில் இருந்துவந்த காலதாமதங்கள் விலகி சுபிட்சம் உண்டாகும்.

Related Posts

Leave a Comment