என்னை அவர் தள்ளி வைத்தார்! செவ்வாய் தோஷம் என்றார்.. கணவனின் கொடூர செயலால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கதி

by Web Team
0 comment

இந்தியாவில் செவ்வாய் தோஷம் உள்ள இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரின் கணவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஷில்பா. இவருக்கும் சோனு என்பவருக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெற்றோர் வீட்டுக்கு தனியாக வந்திருக்கிறார் ஷில்பா.

இதையடுத்து கடந்த வாரம் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட ஷில்பா இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றை எழுதிவைத்துவிட்டு அதை தனது நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், என் கணவரை நான் மிகவும் நேசித்தேன், ஆனால் அவர் என்னை தள்ளியே வைத்தார்.

கணவர், மற்றும் மாமியார் , மாமனார் என்னை தற்கொலைக்கு தூண்டினார்கள். அவர்கள் தான் என் மரணத்துக்கு காரணம் என எழுதப்பட்டிருந்தது.

இது தொடர்பாக ஷில்பாவின் தந்தை ஹரி சிங் கூறுகையில், திருமணம் முடிந்த சில நாட்களில் இருந்தே என் மகளை சோனு மற்றும் அவர் பெற்றோர் கொடுமைப்படுத்தி வந்தனர்.

அதாவது, உனக்கு செவ்வாய் தோஷம் உள்ளது, அதனால் தான் எப்போதும் உடல்நலக்கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளாய்.

நீ என்னை விட்டு போய் விடு, எனக்கு விவாகரத்து வேண்டும் என கூறி சோனு ஓராண்டாக ஷில்பாவை துன்புறுத்தினார் என கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக சோனுவின் பெற்றோரை பொலிசார் ஏற்கனவே கைது செய்தனர்.

ஆனால் சோனு தலைமறைவாக இருந்த சூழலில் நேற்று பொலிசார் அவரை கைது செய்தனர்.

அவரிடம் தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் மேலும் பல தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment