கணவர் பீட்டர்பாலை பிரிந்தது உண்மையே… நொறுங்கும் நிலையில் இருக்கிறேன்! சோகத்துடன் வனிதா வெளியிட்ட பதிவு

by Web Team
0 comment

இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்துவிட்டது என்று பீட்டர் பாலை பிரிந்தது குறித்து வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.

வனிதா விஜயகுமாருக்கும், பீட்டர் பாலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், இருவரும் பிரிந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு வனிதா சோகத்துடன் ட்விட்டரில் பதில் அளித்துள்ளார்.

இதுகுறித்து வனிதா கூறுகையில், காதலில் தோல்வி அடைவது எனக்கு பழக்கம் ஆகிவிட்டது. ஆனால் நான் எப்பொழுதுமே அதை தாண்டி வந்து தைரியமாக இருப்பேன்.

காதலில் நம்பிக்கை வைத்து, ஏமாற்றம் அடைவது தான் மிகவும் வேதனையாகவும், தாங்க முடியாமலும் இருக்கிறது. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேல் உங்களுக்கு அது பெரிதாக தெரியாது.

உங்கள் கண் முன்பு வாழ்க்கை பறிபோவது தான் மிகவும் வேதனையானது. அதை நான் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது நடந்திருக்கக் கூடாது என்று நான் சொல்ல முடியாது. ஏனென்றால் வாழ்க்கை ஒரு பாடம். நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன். நான் தைரியமாக இருக்கிறேன்.

போலி செய்திகளை படித்துவிட்டு நீங்களாக ஏதாவது பேச வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நான் எந்த தவறும் செய்யவில்லை. அதனால் என்னை திட்டுவது சரியில்லை. அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு அதை நான் கொடுத்தேன். என் கனவுகள், வாழ்க்கையின் நம்பிக்கை எல்லாம் நொறுங்கும் நிலையில் நான் இருக்கிறேன். நான் பாசிட்டிவாக இருந்தாலும், பயமாக இருக்கிறது.

வாழ்க்கையில் பல விஷயங்களை பார்த்த தைரியமான பெண் நான். இதுவும் கடந்து போகும் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். தயவு செய்து எதையும் யூகிக்க வேண்டாம், ஏனென்றால் அது காயப்படுத்துகிறது.

அன்பு ஒன்று தான் என்னை பாதிக்க முடியும். எனக்கு அதிசயங்கள் மீது நம்பிக்கை உள்ளது. அப்படி ஒரு அதிசயம் நடக்கும் என்று எதிர்பார்க்கிறேன். எது விதிக்கப்பட்டிருக்கிறதோ அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

இந்த நேரத்தில் நான் யாருக்கும் இதற்கு மேல் விளக்கம் அளிக்க வேண்டியது இல்லை. ஏனென்றால் இது என் வாழ்க்கை. நான் தான் எதிர்கொள்ள வேண்டும். என் பார்ட்னரை எக்ஸ்போஸ் செய்து, குறை சொல்லி நான் அதன் மூலம் நல்லவர் போன்று தெரிய, சிம்பதி பெற விரும்பவில்லை.

இதை நான் எதிர்பார்க்கவில்லை ஆனால் நடந்துவிட்டது. என் குழந்தைகளின் நலனை மனதில் வைத்து நல்ல முடிவை எடுப்பேன். அதிசயம் நடக்க பிரார்த்தனை செய்கிறேன். அப்படி நடக்காவிட்டால் நான் எதிர்கொள்வேன் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment