பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி 16 போட்டியாளர்களுடன் தொடங்கி மிகவும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டுள்ளது.
மேலும் நாளுக்கு நாள் உற்சாகங்கள், வாக்குவாதங்கள், சண்டைகள், சுவாரசியங்கள் மக்களிடையே பெரும் ஆர்வத்தை தூண்டி வருகிறது.
அதனைத்தொடர்ந்து, கடந்த வாரம் முதன்முதலாக பிக்பாஸ் வீட்டில் இருந்து நடிகை ரேகா வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய நாளுக்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
அதில், பிக்பாஸ் கொடுத்த ராஜவம்ச டாஸ்கில், பாலாஜி, சோமை கிழோ தள்ளி விட, சுரேஷ் தட்டிக்கேட்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படுகிறது.