பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும்.. ஷிவானி மற்றும் பாலாஜி பற்றி ரேகாவின் உருக்கமான பதிவு!

by Web Team
0 comment

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் இரண்டு வாரங்கள் கடந்த நிலையில், போட்டியில் சுவாரசியம் குறைவாக காணப்பட்ட போட்டியாளரான நடிகை ரேகா வெளியேறினார்.

அப்போது, வீட்டில் இருந்த போட்டியாளர்களில் அர்ச்சனா , ஷிவானி, பாலாஜி உள்ளிட்டோர் மிகவும் வருத்தப்பட்டு கண்கலங்கி அழுதனர்.

அதில், முதன் முறையாக ஷிவானி அழுதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இதுவரை எதற்கும் கலங்காத ஷிவானியா இப்படி என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இந்நிலையில், தற்போது வீட்டை விட்டு வெளியேறிய ரேகா முதன்முறையாக தனது இன்ஸ்டாவில், பாலாஜி மற்றும் ஷிவானியை ரொம்ப மிஸ் பண்ணுவதாக கூறி வருத்தப்பட்டு பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment