சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை மிளகு பொங்கல்

by Web Team
0 comment

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை ரவை மிளகு பொங்கல்

கோதுமை உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. அந்த வகையில் இன்று கோதுமை ரவையில் மிளகு பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

கோதுமை ரவை – ஒரு கப்,

வேக வைத்த பாசிப்பருப்பு – கால் கப்,

மிளகு (ஒன்று இரண்டாக உடைத்தது) – அரை டேபிள் ஸ்பூன்,

சீரகம் – அரை டேபிள் ஸ்பூன்,

நெய் – 4 டேபிள் ஸ்பூன்,

இஞ்சி – ஒரு துண்டு

கறிவேப்பிலை – சிறிதளவு

ப.மிளகாய் – 4

உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

இஞ்சி துருவிக்கொள்ளவும்

ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

கோதுமை ரவையை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து கொள்ளவும்.

கடாயில் கொஞ்சம் நெய் விட்டு கோதுமை ரவையை போட்டு வாசனை வரும் வரை வறுத்து, தண்ணீர் சேர்த்து வேக விடவும். அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, உப்பு சேர்த்துக் கிளறவும்.

இன்னொரு கடாயில் சிறிது நெய் விட்டு… சீரகம், மிளகு. இஞ்சி துருவல், ப.மிளகாய், சீரகம், கறிவேப்பிலை போட்டு வறுத்து கோதுமை கலவையில் கலந்து, மீதமுள்ள நெய் சேர்த்துக் கலந்து இறக்கவும்.

சூப்பரான கோதுமை ரவை மிளகு பொங்கல் ரெடி.

Related Posts

Leave a Comment