சத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு

by Web Team
0 comment

சத்தான டிபன் சிவப்பு அரிசி புட்டு

குழந்தைகள், வயதானவர்களுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் சிவப்பு அரிசியில் புட்டு செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

சிவப்பு அரிசி அல்லது சிவப்பு புட்டு அரிசி – 2 கப்,

பொடித்த நாட்டுச் சர்க்கரை அல்லது பனைவெல்லம் – தேவைக்கு,

முழு தேங்காய் – 1 (துருவியது),

வாழைப்பழம் – தேவைக்கு,

உப்பு – ஒரு சிட்டிகை.

செய்முறை :

சிவப்பு புட்டு அரிசியை, தண்ணீரில் இரண்டு மணி நேரம் ஊறவைத்து, உலர்த்தி புட்டு மாவு பதத்திற்கு அரைக்கவும்.

பின்பு மாவை லேசாக வறுத்து, உப்பு, தண்ணீர் சேர்த்து, சிறிது ஈரப்பதத்தோடு பிசையவும்.

பின் புட்டுக்குழாயில் முதலில் சிறிது தேங்காய்த் துருவல், பின்பு சிறிது மாவு, இப்படி ஒவ்வொன்றாக சேர்த்து நிரப்பி ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும்.

பின்பு நாட்டுச் சர்க்கரை தூவி, பழத்துடன் பரிமாறவும்.

சூப்பரான சத்தான சிவப்பு அரிசி புட்டு ரெடி.

Related Posts

Leave a Comment