குறைக்கப்பட்ட கட்டணம்! சினிமா படங்கள் ரிலீஸ்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நிறுவனம்

by Web Team
0 comment

குறைக்கப்பட்ட கட்டணம்! சினிமா படங்கள் ரிலீஸ்! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முக்கிய நிறுவனம்

கொரோனா ஊரடங்கால் கடந்த 5 மாத காலமாக சினிமா தியேட்டர்கள் மூடப்பட்டுக்கிடந்தன. படப்பிடிப்புகளும் நடத்தப்படவில்லை. இதனால் சினிமா வட்டாரம் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. சினிமா ஊழியர்களும் வருமான இழப்பை சந்தித்தனர்.

இந்நிலையில் ஊரடங்கு தளர்வால் அக்டோபர் 15 முதல் தியேட்டர்களை திறக்கலாம் என அறிவிப்பு வெளியானது. தற்போதையை சூழ்நிலையில் 50 சதவீத இருக்கைகளுடன் தியேட்டரை நடத்துவது நஷ்டம் என்பதுடன் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியுள்ளது என்பதால் தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டர்களை திறக்க தயக்கம் காட்டுகின்றனர்.

இந்நிலையில் சினிமா தயாரிப்பாளர்களுக்கு கொரோனா கால நிவாரண சலுகையாக க்யூப் நிறுவனம் புதிய படங்களுக்கான விஃப் கட்டணத்தை 50 சதீவதம் குறைத்துள்ளது.

மேலும் 7 காட்சிகள் திரையிடப்படும் அரங்குகளுக்கு மட்டும் இந்த சலுகை செல்லுபடியாகும், டிசம்பர் மாத இறுதி வரை இத்திட்டம் அமலில் இருக்கும் எனவும் கூறியுள்ளது.

இதனால் டிக்கெட் விலை குறைவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment