என்னை திருமணம் செஞ்சுகுறீங்களா! இளைஞரின் கேள்விக்கு நடிகை லட்சுமிமேனன் சொன்ன பதிலை பார்த்தீர்களா!

by Web Team
0 comment

நடிகை லட்சுமி மேனன் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமாக பதிலளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடிகர் சசிகுமாருடன் இணைந்து சுந்தரப்பாண்டியன் என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் லக்ஷ்மி மேனன். அதனை தொடர்ந்து அவர் கும்கி, குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, வேதாளம் மற்றும் இறுதியாக விஜய் சேதுபதிக்கு ஜோடியாக றெக்க படத்திலும் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில், அவர் நடனம் கற்று வருகிறார்.

மேலும் அத்தகைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கிறார். இந்நிலையில் நடிகை லட்சுமிமேனன் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ரசிகர் ஒருவர் நீங்கள் சிங்களா என கேட்டதற்கு அவர் இல்லை என பதிலளித்தார்.

மேலும் மற்றொரு ரசிகர் ஒருவர், என்னை திருமணம் செய்துகொள்வீர்களா? எனக்கு 22 வயது தான் என்று கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த நடிகை லட்சுமி மேனன் யாருப்பா நீ நல்ல இருக்கிறது புடிக்கலயா என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Related Posts

Leave a Comment