யானை மீது அமர்ந்து யோகா செய்த பாபா ராம்தேவ்! சற்று நேரத்திலேயே நேர்ந்த விபத்து! வைரலாகும் ஷாக் வீடியோ!

by Web Team
0 comment

யானை மீது அமர்ந்து பாபா ராம்தேவ் அவர்கள் யோகா செய்யும் போது, கீழே விழுந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பதஞ்சலி என்ற நிறுவனத்தின்  மூலம் ஏராளமான பொருட்களை தயார் செய்து விற்பனை செய்து வருபவர் யோகா குருவான  பாபா ராம்தேவ். 54 வயது நிறைந்த இவர் மதுராவில் உள்ள குரு ஷார்தானந்தா என்ற ஆசிரமத்தில், அலங்கரிப்பட்ட யானை மீது கால்களை மடக்கி அமர்ந்து, தனது சீடர்களுக்கும் பொதுமக்களுக்கும் மூச்சுப் பயிற்சியான பிராணயாமம் செய்து காண்பித்துள்ளார்.

அப்பொழுது யானை சிறிது அசைந்தது. அதில் நிலைதடுமாறிய பாபா ராம்தேவ் தவறி கீழே விழுந்துள்ளார். உடனே இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் பதறிப்போனர். மேலும் அவரை தூக்க ஓடி வந்தனர். ஆனால் கீழே விழுந்தவுடனேயே எதுவும் நடக்காதது போல பாபா ராம்தேவ் எழுந்து மிகவும் சாதாரணமாக  நடந்துள்ளார்.

இவ்வாறு யானையில் அமர்ந்து யோகா செய்யும்போது பாபா ராம்தேவ் கீழே தவறி விழுந்த வீடியோ  தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி,  பெருமளவில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment