தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியமில்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

by Web Team
0 comment

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறக்க சாத்தியம் இல்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார். மேலும், ஆந்திராவில் பள்ளிகளை திறந்ததும் 25-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு நோய் தொற்று உண்டானதாகவும், எனவே கொரோனா பரவல் கட்டுப்படும் வரை தமிழகத்தில் பள்ளிகளை திறக்க சாத்தியமில்லை என்றும் அவர் தெரிவித்தார். மேலும், அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடத்தி, அதன் அடிப்படையில் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது பற்றி தமிழக அரசு முடிவெடுக்கும் என்றும் அவர் கூறினார்.

Related Posts

Leave a Comment