“ஆண் நண்பர்களுடன் வாட்ஸ்ஆப் சாட்டிங்” : மனைவியை கொன்று விட்டு போலீசில் சரணடைந்த கணவன்!

by Web Team
0 comment

ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் லக்ஷ்மி நாராயண நகரை சேர்ந்தவர் மணிகண்டன். இவருக்கு சிந்துஜா என்ற மனைவியும் யோஷிகா என்ற 3 வயது பெண் குழந்தையும் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் மணிகண்டன் வேலை பார்த்து வர மனைவி சிந்துஜா ஹவுஸ் வைஃப் ஆக இருந்து வந்துள்ளார். இதனிடையே சிந்துஜா வாட்ஸ்ஆப் ,மூலம் ஆண் நண்பர்களுடன் சாட்டிங் செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வந்தது. இதன் காரணமாக மணிகண்டன் சிந்துஜாவை பலமுறை எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இருவருக்குமான சண்டை முற்றவே கணவன்-மனைவிக்குள் மீண்டும் சண்டை நிகழ்ந்துள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் சிந்துஜாவின் கழுத்தில் கத்தியால் குத்தியுள்ளார் . இதனால் நிலைகுலைந்த சிந்துஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து தனது மனைவி சிந்துஜாவை கொலை செய்துவிட்டதாக அட்கோ காவல் நிலையத்தில் மணிகண்டன் தானாகவே சரணடைந்தார்.

பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிந்துஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மனைவி இறந்துவிட்டார். கணவன் சிறைக்கு சென்று விட்டார். ஆனால் அவர்களின் மூன்று வயது பெண் குழந்தை நிர்கதியாகிவிட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Related Posts

Leave a Comment