நவராத்திரியில் அம்பிகைக்கு பிடித்த நைவேத்தியங்கள் !

by Web Team
0 comment

ஆதிசக்தியான அன்னையின் ஆயிரம் திருவிளையாடல்களை ஒன்றாக இணைத்த லலிதா சகஸ்ரநாமத்தில் அம்பிகையை வணங்கும் போது அவளுக்கு பிடித்த நைவேத்தியங்களை என்னனென்ன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பிகை கொலுவாக வீற்றிருக்கும் இந்த நவராத்திரின் ஒன்பது நாட்களும் அவளுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவளது பூர்ண அருளாசியை பெறலாம்.
லலிதா சகஸ்ரநாமத்தில் வரும் 480ஆவது ஸ்லோகமான, “பாயஸான்ன ப்ரியாயை’ என்பதற்கு, “பால் பாயசத்தை விரும்புபவள்’ எனப் பொருள்.

501ஆவது ஸ்லோகமான, “குடான்ன ப்ரீத மானஸாயை” என்பதற்கு, “அம்பிகை சர்க்கரைப் பொங்கலை விரும்புபவள்” என்று அர்த்தமாகும்.

526ஆவது ஸ்லோகமான, “ஹரித் ரான்னைக ரஸியை” என்ற ஸ்லோகத்திற்கு, “மஞ்சள் பொடி கலந்த எலுமிச்சை சாதத்தை ரசித்து, ருசித்து உண்பவள்” என பொருள் கொள்ளப்படுகிறது.

அம்பிகை குறித்த இன்னொரு ஸ்லோகமான, “தத்யான்ன ஸக்த ஹ்ருதயாயை” என்ற ஸ்லோகத்திற்கு, “இவள் தயிர் சாதப் பிரியர், தயிர் சாதத்துக்காக என்றால் இதயத்தையே கொடுப்பவள்!” என்று பொருள் வருகிறது.

“முத் கௌத நாஸக்த…” என்ற ஸ்லோகத்திற்கு, “பாசிப்பருப்பு, அரிசியில் சமைத்த வெண்பொங்கலை விரும்புபவள்!” என்று அர்த்தமாகும்.

“ஸர்வெளதன ப்ரீதசித்தா” என்ற ஸ்லோகத்திற்கு, “அம்பிகை கதம்ப சாதம், தேங்காய் சாதம், புளியோதரை ஆகியவற்றை உண்ணும் மனதைக் கொண்டவள்!” எனப் பொருள்படுகிறது.

இதையெல்லாம் முடித்த பிறகு 559ஆவது ஸ்லோகத்தில், “தாம்பூல பூரிதமுகிச்யை” என்ற ஸ்லோகம் வருகிறது. இதற்கு, “தாம்பூலம் தரித்ததால் லட்சணமாக இருக்கும் முகத்தைக் கொண்டவள்!” எனப் பொருள்படுகிறது.

“தாம்பூலம்” என்பது மகாலட்சுமியின் அம்சமான வெற்றிலை, பாக்கைக் குறிக்கும். எனவே தான், கடவுளுக்கு நாம் நிவேதனம் படைத்து வழிபடுகிறோம்.

இதைத்தவிர அவரவருக்கு என்ன நைவேத்யமாக வைத்து பூஜிக்க முடியோமோ அதை வைத்து வணங்கலாம்.

அம்பிகையான அன்னை குழந்தைகளான நம்மிடம் எதிர்பார்ப்பது உண்மையான, ஆத்மார்த்தமான பக்தியே! நாமும் நமக்கு தெரிந்த முறையில் அம்பிகையை மனதார நினைத்து, அன்னையின் அருளை பெறுவோம்.

தேவி சரணம் ! ஸ்ரீ மாத்ரே நமஹ !

Related Posts

Leave a Comment