கிழிந்த ரம்யாவின் முகத்திரை! வேடிக்கை பார்க்கும் ரியோ…. விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லை! தீயாய் பரவும் காட்சி

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது லேசாக சூடுபிடிக்க ஆரம்பித்து உள்ளது.

பிக்பாஸ் கொடுத்த பிரீ பாஸை கைப்பற்ற சுரேஷ் சக்கரவர்த்தி போட்ட மாஸ்டர் பிளானை தான் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் காரசாரமாக விவாதித்து வருகின்றனர்.

அதிக வாக்குகள் பெற்று நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தவர்கள் அடிப்படையில் இது நிகழ்ந்தது. ஆனால் வீட்டின் தலைவர் என்பதால் சுரேஷை யாரும் நாமினேட் செய்யவில்லை. இதை மற்ற யாரும் கண்டுபிடிக்காமல் வெளியேறி சென்றனர். கேப்ரியலா இதுகுறித்து பேச முயன்றபோது அவரையும் சாமர்த்தியமாக சுரேஷ் வெளியே அனுப்பி விட்டார்.

இதை அப்போது பெரிதாக கண்டுகொள்ளாத மாதிரி இருந்த ரம்யா பின்னர் அதை வைத்தே அவருக்கு ஸ்கெட்ச் போட்டு வெளியேற்றி விட்டார். ஆஜித்தும் சேர்ந்து கொண்டதால் வேறு வழியில்லாமல் வெளியேறினார். ஆனாலும் நான் ஸ்ட்ரேட்டஜி வைத்துத்தான் விளையாடினேன் என சுரேஷ் ஒப்புக்கொண்டார். பின்னர் ஆஜித்துக்கு அதை விட்டுக்கொடுத்து ரம்யா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்து விட்டார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் அவரை விட நீ தான் தாம்மா பயங்கர பிளானோட கேம் விளையாடுற என ரம்யா குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். சுரேஷ் போல ரம்யாவும் வலிமையான போட்டியாளர் என்பதால் இனி விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப் படுகிறது.

Related Posts

Leave a Comment