சிவபெருமானே அரிய மா ஒளியே பக்தி துதி

by Web Team
0 comment

சிவபெருமானே அரிய மா ஒளியே பக்தி துதி

அரிய மா ஒளியே அற்புதனே சரணம் சரணம்
அருள் சுரக்கும் தெய்வமே ஆதியே சரணம் சரணம்
அனுகூலம் செய்பவனே ஆரமுதே சரணம் சரணம்

அன்புள்ள அப்பனே ஆரூரானே சரணம் சரணம்
அற்புத உருவே ஆதியே ஜோதியே சரணம் சரணம்
அறவழி காட்டுவோனே ஆலவாயனே சரணம் சரணம்
இணையில்லாத் துணையே ஈங்கோய்மலை தேவனே சரணம்
இரக்கம் மிகுந்தவனே ஈடில்லா ஈசனே சரணம் சரணம்
இனிமை தருபவனே இமயத்தில் இருப்பவனே சரணம் சரணம்
இன்பத்தின் இன்பமே இன்னல் தீர்ப்பவனே சரணம் சரணம்
எமையாளும் ஈசனே ஏற்றமளிப்பவனே சரணம் சரணம்
எங்குமுன் திருவருள் எளியவனே சரணம் சரணம்
எகாம்பரநாதனே என்குணசீலனே சரணம் சரணம்
ஏகாந்தவாசனே ஏட்டுமானூர் அப்பனே சரணம் சரணம்
கதியே காருண்யனே கடுத்திருத்தி அப்பனே சரணம் சரணம்
புனிதனே பெரியோனே பெருவுடையாரே சரணம் சரணம்
வையகம் காக்கும் வைக்கத்து வள்ளலே சரணம் சரணம்
சிக்கல் தீர்ப்பவனே சிவகுருநாதனே சரணம் சரணம் சரணம்.

Related Posts

Leave a Comment