கருப்பா இருப்பாங்கன்னு சொன்ன அனிதா சம்பத்தின் அம்மா இவங்கதான்! முதல் முறையாக வெளியான புகைப்படம்.

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிவரும் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் அவர்க்ளின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விளையாடிவரும் செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் அவர்க்ளின் அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி தற்போது வைரலாகிவருகிறது.

16 பிரபலங்களுடன் தொடங்கியுள்ள பிக்பாஸ் சீசன் 4 ஏழு நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்துவருகிறது. வழக்கம் போல் இந்த சீசனிலும் போட்டி, பொறாமை, சண்டை, வாக்குவாதம், அழுகை என பிக்பாஸ் வீடு காரசாரமாக உள்ளது. இந்நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்ட செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் அவர்களின் தாயார் புகைப்படம் தற்போது வைரலாகிவருகிறது.

சில நாட்களுக்கு முன், பிக்பாஸ் போட்டியாளர்களில் தங்களுக்கு பிடித்தவர்களுக்கு ஹார்ட் சிம்பல் கொடுக்கும்படி கூறியிருந்தார் பிக்பாஸ். அப்போது அனிதா சம்பத் அந்த ஹார்ட் சிம்பலை அறந்தாங்கி நிஷாவுக்கு கொடுக்கப்பதாகா கூறி, அதற்கு ஒரு காரணத்தையும் கூறினார்.

அறந்தாங்கி நிஷா பார்ப்பதற்கு தனது அம்மா போல் இருப்பதாகவும், நிஷா போன்றே தனது அம்மாவும் கருப்பாக இருப்பார், அதனால் அவர் தாழ்வு மனப்பான்மையில் வெளியேவர தயங்குவார், நகை கூட போட்டுக்கொள்ளமாட்டார். எனது பள்ளி விழாவிற்கோ, அல்லது பெற்றோர் ஆசிரியர் சந்திப்பிற்கு கூட அவர் வர மாட்டார் என கூறி கண்கலங்கினார்.

இந்த நிலையில் தற்போது அனிதா சம்பத் தனது பெற்றோருடன் இருக்கும் குடும்ப புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment