500 ஆண்டுகளுக்கு முந்தைய சவப்பெட்டி! திறந்து பார்த்த ஆய்வாளர்களுக்கு அடுத்தடுத்து காத்திருந்த அதிசயம்

by Web Team
0 comment

எகிப்தில் 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட 59 மர சவப்பெட்டிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆய்வாளர்கள் இந்த பெட்டிகளை சமீபத்திய அகழ்வாராய்ச்சியில் கண்டெடுத்துள்ளனர்.கண்டெடுக்கப்பட்ட பெட்டிகளை திறந்து பார்க்கையில் உள்ளே ஏறத்தாழ 2,500 ஆண்டுகளுக்கு முன்னர் பதப்படுத்தப்பட்ட மனித உடல்கள் இருந்துள்ளது. எகிப்தில் பண்டைய புதைகுழி பகுதியான சக்கராவில் பிரபலமான கிசா பகுதியில் பல பிரமிடுகள் உள்ளன.

இந்த பகுதி 1970 களில் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டது. தற்போது இந்த இடத்தில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியில்தான் மேற்குறிப்பிட்ட சவப்பெட்டிகள் கிடைத்துள்ளன.”இந்த கண்டுபிடிப்பு குறித்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று தொல்லியல் துறை தலைமை கவுன்சிலின் பொதுச் செயலாளர் மொஸ்டபா வஜீரி கூறினார். மேலும், தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள மம்மிகள் எவ்வித பாதிப்புக்குள்ளாகாமலும் உள்ளதாகவும், இது ஆராய்ச்சியாளர்களுக்கு நூற்றாண்டின் பரிசு என்றும் வஜீரி கூறியுள்ளார்கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகள் கிசா பீடபூமியில் தற்போது கட்டுமானத்தில் இருக்கும் புதிய கிராண்ட் எகிப்திய அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கிடைக்கப்பட்டுள்ள சிலைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் கூடுதலான எண்ணிக்கையில் சவப்பெட்டிகள் கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக வஜீரி குறிப்பிட்டுள்ளார்.கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகளுடன் இறந்த கடவுளின் 28 சிலைகளையும் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் மீட்டனர், அத்துடன் நெஃபெர்டம் தெய்வத்தின் பெஜுவல் வெண்கல சிலையும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட சவப்பெட்டிகள், சுற்றுலா பயணிகளை பெரிதளவில் ஈர்க்கும் என்றும் அதன் மூலமாக வருவாய் அதிகரிக்கும் என்றும் அரசு தரப்பில் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Related Posts

Leave a Comment