திருக்கல்யாண உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று நடக்கிறது

by Web Team
0 comment

திருக்கல்யாண உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் இன்று நடக்கிறது.

ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் விருச்சிக லக்னம் அன்று ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும்.

அதன்படி, இந்த ஆண்டு இன்று (சனிக்கிழமை) திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இன்று காலை விருச்சிக லக்னத்தில் திருக்கோவிலின் மூலவர் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெறுகிறது. காலை 9 மணிக்கு மாப்பிள்ளை அழைப்பு விடுத்தல், எஜமான் சங்கல்பம், முளைப்பாரி எடுத்தல், மாலை மாற்றுதல், கன்னிகாதானம் நடைபெறுகிறது.

இந்த உற்சவத்தில் கலந்து கொண்டால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். திருமணமாகாதவர்கள் 2 மாலையோடு வந்து திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டு வேண்டிக்கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்று கிராம மக்கள் கூறி வருகின்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கார்த்திகை செல்வி மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment