அம்மா உணவகங்களில் விற்பனை அதிகரிப்பு

by Web Team
0 comment

சென்னையில் 407 இடங்களில் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது இந்த உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.

இதனால் ஏழை-எளிய மக்கள் அம்மா உணவகங்களுக்கு பாத்திரங்களை கொண்டு சென்று 3 வேளையும் உணவு வாங்கிச்சென்றார்கள். பின்னர் படிப்படியாக தளர்வு செய்யப்பட்டதால் இலவசமாக வழங்கப்பட்ட உணவு நிறுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து அம்மா உணவகங்களில் கூட்டம் குறைந்து விற்பனை சரிந்தது. வேலை இல்லாமல் முடங்கிய கூலித்தொழிலாளர்கள் விலை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்க முடியாமல் கஷ்டப்பட்டார்கள்.

இந்தநிலையில் உணவகங்களில் படிப்படியாக வியாபாரம் அதிகரித்தது. சிறு தொழில்நிறுவனங்கள், கம்பெனிகள் திறக்கப்பட்டதாலும் பொது போக்குவரத்து தொடங்கியதாலும் மீண்டும் பழைய நிலைக்கு விற்பனை எட்டியது.

தற்போது அனைத்து அம்மா உணவகங்களிலும் 3 வேளையும் உணவு பொருட்கள் உடனே விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. இதனால் வருவாய் அதிகரித்துள்ளது.

இதுகுறித்து அம்மா உணவக ஊழியர் ஒருவர் கூறும்போது, ‘கடந்த ஒரு மாதமாக விற்பனை நன்றாக நடக்கிறது. தயாரிக்கின்ற உணவுப்பொருட்கள் அனைத்தும் விற்றுவிடுகின்றன. மதிய சாப்பாட்டுக்கு 10 கிலோ அரிசி, இட்லிக்கு 12 கிலோ அரிசி, சப்பாத்திக்கு 10 கிலோ கோதுமைமாவு ஆகியவை தினமும் பயன்படுத்துகின்றோம்.

இவை அனைத்தும் மீதம் ஆகாமல் இப்போது விற்று விடுகின்றன. கூலித் தொழிலாளர்கள் அதிகம் பேர் வருகிறார்கள். மந்தமாக இருந்த அம்மா உணவகம் இப்போது விறுவிறுப்படைந்து உள்ளது.

Related Posts

Leave a Comment