பிக் பாஸ் வீட்டில் நிசா அடிக்கும் கூத்து? அஞ்சி நடுங்கிய ஷிவானி : தீயாய் பரவும் அன்சீன் வீடியோக்கள்

by Web Team
0 comment

நல்ல நல்ல சீனை எல்லாம் ஹாட்ஸ்டாரில் போட்டுவிட்டு, மொக்கை சீன்களாக விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்றீங்களே என பிக் பாஸ் ரசிகர்கள் அன்சீன் வீடியோக்களை பார்த்து புலம்பி வருகின்றனர்.

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரை பிரபலப்படுத்தும் நோக்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை அதிக நேரம் அங்கே ஒளிபரப்பு செய்கின்றனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேரம் குறைவு என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்பட்டு வருகிறது.

ஏகப்பட்ட சுவாரஸ்யமான, நகைச்சுவையான காட்சிகளை பிரத்யேகமாக ஹாட்ஸ்டாரில் மட்டுமே பார்க்க முடியும் என்கிற அளவுக்கு விஜய் டிவி செய்திருப்பதால் பிக் பாஸ் ரசிகர்கள் ரொம்பவே அப்செட் ஆகி உள்ளனர்.

ஹாட்ஸ்டாரில் பார்க்க முடியாத நிலையில், சமூக வலைதளத்தில் வெளியாகும் அன்சீன் வீடியோக்களை பார்த்து, இதெல்லாம் சேர்த்து போடலாம்ல என விஜய் டிவியை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

Related Posts

Leave a Comment