சுரேஷ் & அனிதா இடையே பிரச்சினை – நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

by Web Team
0 comment

சுரேஷ் & அனிதா இடையே பிரச்சினை – நல்ல மாட்டுக்கு ஒரு சூடு

பிக் பாஸ் தமிழ் சீசன் 4, 3-ம் நாள் முதல் ப்ரோமோவில் அடுத்த வார எலிமினேஷன் அறிவிப்பை விஜய் டிவி ப்ரோமோவில் காட்டியது.

நேற்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவரும் தங்கள் சோக பக்கத்தை கூறி, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தனர்.இந்நிலையில், தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில், மீண்டும் சுரேஷ் மற்றும் அனிதா சம்பத்திற்கும் இடையே பிரச்சினை வெடிக்க ஆரம்பித்துள்ளது.அதில், சுரேஷ் பேசாத என அனிதாவை கூற, உடனே பதிலடி கொடுப்பதும்போல் அனிதாவும் முடியாது என தெரிவிக்கிறார்.இதனால், நல்ல மாட்டுக்கு ஒரு சூடு என அனிதாவை கூற, பின்னாடி சென்ற பாலாஜி அப்போ எருமை மாட்டுக்கு என்ன சூடு என கிண்டலடிக்கிறார்.இதையடுத்து, ரேகா சமதானம் செய்ய அவர்கள் ஒன்றும் சின்னப்பிள்ளை என சுரேஷ் கொந்தளித்துள்ளார். எப்படியும் இந்த பிரச்சினை மீண்டும் பரபரப்பாகி கமலிடம் வந்து சேரும் என எதிர்பார்க்கலாம்.

Related Posts

Leave a Comment