பிக் பாஸ் நாள் 2 – அனிதா சம்பத் – சுரேஷ் இடையே வெடித்த பிரச்சினை

by Web Team
0 comment

பிக் பாஸ் நாள் 2

பிக்பாஸ் 4 நிகழ்ச்சி கடந்த 4-ம் தேதி முதல் துவங்கி விறு விறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது.

இதில் கவர்ச்சி சர்ச்சை, சண்டை என ஒவ்வொன்றுக்கும் தேடிப்பிடிச்சு ஆளை பொறுக்கிப்போட்டுள்ளனர்.

ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் தங்களுக்கு கொடுத்துள்ள ஸ்க்ரிப்ட் படி நன்றாக செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், எங்கே சண்டை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என எதிர்பார்த்த நிலையில், சுரேஷ் சக்கரவர்த்திக்கும், அனிதா சம்பத்துக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. அதில், அனிதா, சுரேஷ் சக்கரவர்த்தியிடம் நான் எல்லாம் நியூஸ் எடிட்டர்ட பேசவே மாட்டேன்., அவங்க பேசுன எச்சில் தெறிக்குது என கூறியதாக நீங்க ஏன் பேசுறீங்க என வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார்.அதற்கு நான் அப்படியெல்லாம் பேசவே இல்லை என கூற, உங்களுக்கு குறும்படம் தான் போட்டு காண்பிக்க வேண்டும் என கோப பட, அதற்கு சுரேஷ் பெரிய படமாவே போடு என பொங்கியுள்ளார். எப்படி இந்த வாரம் ஒரு குறும்படம் கமலிடம் இருந்து வரும் என ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

Leave a Comment