முதல் வாரத்திலேயே தலையில் ஏறிய கிரீடம்.. கேப்டனான ரம்யா பாண்டியன்

by Web Team
0 comment

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாள் முதல் எபிசோட் இன்று ஒளிபரப்பாகி வருகிறது.

இதில் காலையிலேயே வாத்தி கம்மிங் பாடலை போட்டு ஆட விட்டார் பிக்பாஸ்.

தொடர்ந்து கார்டன் ஏரியாவுக்கு ஹவுஸ் மேட்ஸ்களை அழைத்த பிக்பாஸ், அங்கிருந்த கட்டத்தை சுற்றி நிற்குமாறு கூறினார். பின்னர் மேலே கட்டப்பட்டிருந்த பையை அவிழ்க்க சொன்ன பிக்பாஸ் அதில் இருந்த பந்துகளை எல்லோரையும் பொருக்க சொன்னார். தொடர்ந்து ரம்யா பாண்டியனை கன்ஃபெஷன் ரூமுக்கு அழைத்த பிக்பாஸ் அவருக்கு வாழ்த்து கூறினார். தொடர்ந்து, இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் தலைவர் நீங்கள்தான் என்று கூறினார்.

கேட்ட உடனே தலையில் கையை வைத்த ரம்யா பாண்டியன், பின்னர் ஏற்றுக்கொண்டார். பிக்பாஸுக்கு நன்றி கூறிய ரம்யா பாண்டியன், அங்கிருந்த கிரீடத்தை தலையில் வைத்துக் கொண்டும் பின்னால் சூப்பர் மேன் போன்று கட்டிக்கொண்டும் வந்து சக ஹவுஸ்மேட்ஸ்களிடம் கூறினார்.

மேலும் பாத்திரம் கழுவுவதற்கு, பாத்ரூம் க்ளீன், சமையல், ஹவுஸ் கீப்பிங் என அனைத்திற்கும் குழுக்களை பிரித்தார் ரம்யா பாண்டியன்.

Related Posts

Leave a Comment