பிக்பாஸ் வீட்டில் சுற்றிப் பார்க்க சென்ற கமல் தடுமாறியது
கொரோனா தொற்று காரணமாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த மக்கள் அனைவரும் தற்போது தங்களது வேலைகளை மெதுவாக துவங்கி வருகின்றனர்.இவ்வாறு இருக்கையில் நேற்றைய தினத்தில் பிரபல பிக்பாஸ் நிகழ்ச்சியினை தொடங்கியுள்ளது. இதன் ஆரம்பத்தில் பல தத்துவங்களை கூறி வீட்டை சுற்றிக் காட்டினார்.
கொரோனாவால் வீட்டில் அடங்கியிருந்த நாம் சற்று வெளியே வர ஆரம்பித்தது போல, கமலும் தனது வேலையினை முதல் அடி எடுத்து வைத்துள்ளதாக கூறியுள்ளார்.மேலும் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் நீச்சல் குளத்தினை நெட் வைத்து மூடிவைத்துள்ளனர். இதில் சிறு சிறு பூச்சிகள் விழுமே தவிர, ஆட்கள் யாரும் தவறிவிழ முடியாது.
மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் மனிதாபிமானமுள்ள வலை என்று கூறியுள்ளார்.பின்பு ரசிகர்களை குஷிப்படுத்த நிலைத்தடுமாறி கீழே விழப்போவது போன்று அவர் நடித்த நடிப்பை அவதானித்த பார்வையாளர்கள் பலரும் உண்மை என்றே நினைத்தனர்.