உடல் எடையை குறைப்பதற்காக டயட்: பிரபல நடிகை பரிதாப மரணம்

by Web Team
0 comment

உடல் எடையை குறைப்பதற்காக கீட்டோ டயட் முறையை பின்பற்றிய நடிகையான மிஷ்டி முகர்ஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

உலக அளவில் உடல் எடையைக் குறைப்பதற்காகப் பின்பற்றப்படும் டயட்களில் கீட்டோ டயட் முக்கிய இடத்தை வகிக்கிறது.

உணவில் மிக மிகக் குறைந்த அளவில் மாவுச்சத்தை எடுத்துக்கொண்டு அதிக அளவில் கொழுப்பையும், அதற்கும் கொஞ்சம் குறைவாகப் புரதத்தையும் எடுத்துக்கொள்வதுதான் கீட்டோ டயட்.

இந்த டயட் முறையை மேற்கொண்டு வந்த நடிகையான மிஷ்டி முகர்ஜி சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டார்.

இதில் அவரது உடல்நிலை மோசமடைய சில நாட்களுக்கு முன்னர் பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கடந்த வெள்ளிக்கிழமை (02.10.20) அன்று மிஷ்டி முகர்ஜி மரணமடைந்தார். அவருக்கு வயது 27.

கீட்டோ டயட் முறையை தொடர்ந்து பின்பற்றியதாலேயே மிஷ்டி முகர்ஜிக்கு சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave a Comment