நடிகை தமன்னா ஆஸ்பத்திரியில் அனுமதி
ஐதராபாத்தில் நடைபெற்று வந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகை தமன்னாவுக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டது. இதையடுத்து பரிசோதனை செய்தபோது அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஐதராபாத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் தமன்னா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தமன்னாவுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதை அறிந்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் தமன்னா விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதம் தமன்னாவின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.