குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள பயங்கரமான விஷயம் என்ன?

by Web Team
0 comment

பத்து மாதம் வயிற்றில் சுமக்கும் தாய், ஒவ்வொரு நாளும் ஏதேனும் தவறு ஏற்பட்டுவிடுமோ என்ற மன பயம்/உளைச்சல் மற்றும் உடல் உபாதைகளுடன் சுமந்த பின்னர் மனித உடலில் அதிக வலி என கூறப்படும் பிரசவ வலியுடன் (57 DEL) குழந்தையை பெற்று எடுக்கிறார்.

நடு ராத்திரியில் திடீரென அழும் இளம் குழந்தைக்கு என்ன ஆச்சோ! என பதறி எழும் தாய், குழந்தை பசியில் அழுகிறதா? வயிற்று வலியால் அழுகிறதா? வேறு ஏதும் பிரச்சனையால் அழுகிறதா? என தெரியாமல் குழம்பும்போது வரும் மன வலி (குழந்தை பெற்ற தாய் மட்டுமே உணரும் வலி).

இதுவே கிராமம் என்றால் குழந்தையை வேறு ஏதாவது விஷப்பூச்சி அல்லது எறும்பு கடுத்து விட்டதோ என அறை மற்றும் ஆடைகளை பரிசோதனை செய்து பார்ப்பார் தாய்.

பச்சிளங்குழந்தை எழுந்து நடக்கும் வரை உணவு, ஆடை உடுத்துவது, குளிக்க வைப்பது, தூங்க வைப்பது என அனைத்திலும் தாய் பிரியாமல் இருக்க வேண்டும். அனைத்திலும் கவனம் தேவை.

வெது வெதுப்பான தண்ணீரில் காலின் மடியில் படுக்க வைத்து குளிக்க வைக்கும் போது தலையை அழகாக அமுத்தி பிடித்து விடுவது மற்றும் மூக்குக் குழியை இழுத்து விடுவது என குழந்தையை அழகாக மாற்றுவாள் தாய்.

இந்த சமயத்தில் குழந்தை தூக்கவதில் அதிக கவனம் தேவை. இதில் சிறு தவறு கூட பெரிய பிரச்சனைகளைத் தரும்.

மேலும் குழந்தை தூங்கும் நேரமும் தாய் தூங்கும் நேரமும் எதிரும் புதிருமாக இருக்கும். இதனால் தாயை தூங்க விடமாட்டார் குழந்தை.

குழந்தை எழுந்து நடக்க ஆரம்பித்து விட்டால், அதற்கு மேல் ஒரு படி பிரச்சனை கூடும். மேசை, நாற்காலி மற்றும் படுக்கையில் இருந்து கீழே விழாமல் பார்த்து கொள்வதே ஒரு பெரிய பிரச்சனை.

தன் கண்ணில் பட்ட அனைத்து பொருட்களையும் எடுத்து வாயில் வைக்கும் கடிக்கும் பழக்கம் குழந்தைக்கு வரும். அவர்கள் கைகளுக்கு எட்டாமல் பொருட்களை வைப்பதே பெரிய வேலை.

சில சமயத்தில் உயிருக்கு உலை வைக்கும் சம்பவம் கூட நடக்கும். அருகே உள்ள மின்சார இணைப்பை இழுத்து பார்ப்பார்கள் அல்லது வீட்டில் உபயோக்கிகும் ரசாயனத்தை எடுத்து வாயில் வைத்து பார்ப்பார்கள்.

நடக்கும் குழந்தையை தனியே விடுவது பாம்பின் வாயில் கையை விடுவதற்கு சமம்.

குழந்தைகள் பேச ஆரம்பித்து விட்டார்கள் என்றால் அடுத்த லெவல் பிரச்சனைகள் ஆரம்பம்.

சாதாரணமாக ஒரு குழந்தை ஒரு நாளைக்கு 3000–4000 கேள்விகள் கேட்பார்கள் என உளவியலாளர்கள் கூறுகின்றனர். இந்த கேள்விகள் மற்றும் நம்முடைய பதில்கள் அவர்களுடைய குணாதிசயத்தை தீர்மானிக்கிறது.

அவர்களுக்கு பிடித்த விடயம் மற்றும் நல்ல விடயம் இவை இரண்டுமே எதிரெதிர் துருவங்கள்.

பெற்றோரின் கால் தடங்களே குழந்தைகள் பின்பற்றுகிறார்கள்.

“எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவர் நல்லவராவதும் கெட்டவராவதும் பெற்றோர் வளர்ப்பினிலே”

இவற்றை சரிவர சீரமைத்து தருவதில் பெற்றோரின் பங்கு 100% முடிவு செய்யும்.

ஒவ்வொரு நாளும் பள்ளி சென்று வீடு திரும்பும் குழந்தை இந்த இடைப்பட்ட நேரத்தில் பெற்றோரின் சிந்தனை தன் குழந்தைக்கு என்ன ஆகிவிடுமோ! என்ற பதற்றமும் என்ன செய்கிறார்? என்ற சிந்தனையுடன் காலத்தை கடத்துவதே பெற்றோரின் நிலை.

நாம் அன்றாட செய்தித்தாள்களில் படிக்கும் செய்தி குழந்தையின் ஆடை அல்லது காலணி உள்ளே இருந்த விஷப்பூச்சி (தேள்) கடித்து குழந்தை இறந்தது. வீட்டின் மின்சார இணைப்பை தொட்டு குழந்தை இறப்பு, பாத்ரூம் பினாயில் குடித்து குழந்தை இறப்பு மற்றும் பல.

இவற்றிற்கு எல்லாம் ஒரே காரணம் “பெற்றோர்களின் கவனக் குறைவு” இதனை தவிர்க்க போராடுவதே பெற்றோரின் வாழ்க்கை.

கண்முன் வாழும் தெய்வம் – குழந்தை

அழகு குட்டி செல்லம் உன்னை அள்ளி தூக்கும் போது, உன் பிஞ்சு விரல்கள் மோதி என் நெஞ்சம் உடைந்து போனேன்.

Related Posts

Leave a Comment