சிம்பு படத்தின் அறிவிப்பு #STR39

by Web Team
0 comment

சிம்பு நடிப்பில் தற்போது மாநாடு திரைப்படம் உருவாக இருக்கிறது.

சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார். ஊரடங்கு காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை அடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. இந்நிலையில், இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. சிம்புவின் 39-வது படத்தை சுசீந்திரன் இயக்க இருப்பதாகவும், சிம்பு சினி ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தின் அடுத்த வாரம் திண்டுக்கலில் தொடங்க இருப்பதாகவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

30 நாட்களில் படப்பிடிப்பை முடித்து விட்டு பொங்கலுக்கு இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதில் சிம்பு நீண்ட இடைவெளிக்குப் பிறகு கிராமத்து இளைஞனாக நடிக்க இருக்கிறார்.

Related Posts

Leave a Comment