தளபதி 65 அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது?

by Web Team
0 comment

இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள தளபதி 65 படத்தின் அறிவிப்பு வரும் புத்தாண்டு அல்லது பொங்கலில் வெளியாகும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

மாநகரம், கைதி படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனங்களை சிறைபிடித்த இயக்குநர் லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், தனது 65 வது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குநர் ஏ.ஆர் முருகதாஸுக்கு கொடுத்துள்ளார். இப்படத்தில் தமன்னா விஜய்க்கு ஜோடியாக நடிக்கிறார்.

இப்படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார் என்பதை, அவரே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். ஆனாலும், இப்படத்திற்கான அறிவிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாததால் விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். இந்நிலையில், தளபதி 65 படத்தின் அறிவிப்பு வரும் புத்தாண்டு அல்லது பொங்கல் அன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே, விஜய், முருகதாஸ் கூட்டணியில் கடந்த 2012 ஆம் ஆண்டு துப்பாக்கி வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதற்கடுத்ததாக, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் வெற்றிக் கொடுத்த கூட்டணி என்பதால் தளபதி படத்தின் அறிவிப்பை மெர்சல் செய்ய விஜய் ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

Related Posts

Leave a Comment