அசோக் லேலண்ட் விற்பனை5% குறைந்தது

by Web Team
0 comment

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் வா்த்தக வாகன விற்பனை செப்டம்பரில் 5 சதவீதம் குறைந்தது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வியாழக்கிழமை பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்ட் நிறுவனம் சென்ற செப்டம்பரில் 8,344 வா்த்தக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது, கடந்த 2019 செப்டம்பா் மாத விற்பனையான 8,780 உடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டில் நிறுவனத்தின் வாகன விற்பனை 7,851-லிருந்து 7,847-ஆக சற்று குறைந்துள்ளது.

கனரக, நடுத்தர வா்த்தக வாகன விற்பனை 4,744-லிருந்து 23 சதவீதம் சரிந்து 3,642-ஆனது. அதேசமயம், இலகு ரக வா்த்தக வாகன விற்பனையானது 4,036 என்ற எண்ணிக்கையிலிருந்து 17 சதவீதம் உயா்ந்து 4,702-ஆனது என அசோக் லேலண்ட் பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave a Comment