மிகவும் முக்கியமான முதலீட்டு ஆலோசனை, கூட்டு வட்டியின் பலனை அனுபவிக்க, சீக்கிரமாக முதலீடு செய்யத் தொடங்குங்கள். மேலும், தொடர்ந்து செய்து வாருங்கள். என்பதே. எவ்வளவு சீக்கிரம் முதலீடு தொடங்குகிறோமோ, அவ்வளவு சீக்கரம் நல்லது.
சீக்கிரமாக முதலீடு செய்யத் தொடங்குவது நலம்
ஒருவர் ரூபாய், 10 லட்சம் அவரது 32 வயதில், 9% கூட்டு வட்டியில் முதலீடு செய்கிறார் எனில்,
32 வயது = 10 லட்சம்
40 வயது = 20 லட்சம்
48 வயது = 40 லட்சம்
56 வயது = 80 லட்சம்
64 வயது = 1 கோடியே 60 லட்சம்
72 வயது = 3 கோடியே 20 லட்சம்
காலம் செல்ல செல்ல, வட்டி ஈட்டித் தரும் பணமானது கூடிக் கொண்டே செல்கிறது. பின்வரும் வரைபடத்தில், நீலம் – முதலீடு செய்த பணம், பச்சை – ஈட்டிய பணம். காலம் செல்ல, அதை கால கட்டத்திற்கு, பச்சை கோடானது, முந்தைய பச்சைக் கோட்டை விட, அதிகமாக வளர்ந்துள்ளது.
இதற்கு பதிலாக, அவர் இந்த முதலீட்டினை 24 வயதில் தொடங்கியிருந்தால், 72வது வயதில், அவர் அடையும் பணம், 6 கோடியே 40 லட்சம். 8 வருடம் தாமதாக முதலீடு செய்வதால், அவர் ஈட்டிய தொகை குறைகிறது.
8 ஆண்டுகளுக்கு முன்பே, முதலீடு தொடங்குவதன் மூலம், அவர் 3 கோடியே 20 லட்சம் கூடுதலாகப் பெறுகிறார்.
மாதா மாதம் தொடர்ந்து முதலீடு செய்வது நலம்
இதற்கு மேலும், அவர் வருடா வருடம், தொகையை மேன் மேலும், முதலீடு செய்தார் என்றால், கூட்டு வட்டியானது இன்னும் அதிகமாக பலன் தரும்.
இங்கு 24 வது வயதில், ரூபாய். 10 லட்சம் முதலீடு செய்து, பின் மாதா மாதம் ரூபாய் 10,000 செய்கிறார் என்றால், அவர் 72 வயதில் அடையும் பணம் எவ்வளவு தெரியுமா ? உங்களை கொஞ்சம் சுதாரித்துக் கொள்ளுங்கள்.
17 கோடியே 13 லட்சம் ஆயிரத்து 471 ரூபாய்.
பின்வரும் வரைபடத்தில், அவர் செய்த முதலீடான ரூபாய். 10 லட்சம் (நீல நிறம்) கண்ணுக்கே தெரியவில்லை. அவர் மாதாமாதம் செய்த தொடர் முதலீடு (மஞ்சள் நிறம்) கொஞ்சம் தெரிகிறது. ஆனால், கூட்டு வட்டி ஈட்டித் தந்த தொகை எங்கேயே சென்றுவிட்டது.
எனவே, சீக்கிரமாகத் தொடங்கி, மாதா மாதம் தொடர்ந்து செய்து வர, முதலீடு நிஜமாகவே கை மேல் பலன் கொடுக்கும்.