புது வகையான பப்பாளி குழம்பு செய்முறை

by Web Team
0 comment

செய்ய தேவையான பொருள்கள்:

பப்பாளி – அரை கப் (நறுக்கியது)

எண்ணெய் – இரண்டு கரண்டி

பட்டை – ஒன்று

லவங்கம் – ஒன்று

ஏலக்காய் – ஒன்று

அண்ணாச்சிபூ – ஒன்று

சோம்பு – ஒரு டீஸ்பூன்

பச்சை மிளகாய் – இரண்டு (நறுக்கியது)

வெங்காயம் – இரண்டு (நறுக்கியது)

இஞ்சி, பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்

கருவேப்பில்லை – சிறிதளவு

கொத்தமல்லி – சிறிதளவு

தக்காளி – ஒன்று

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்

உப்பு –அளவுக்கேற்ப

சோம்பு தூள் – ஒரு டீஸ்பூன்

சீரக தூள் – ஒரு டீஸ்பூன்

தனியா தூள்- இரண்டு டீஸ்பூன்

தேங்காய் பால் – ஒரு டம்ளர்

செய்முறை :

(1)வடசட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், அண்ணாச்சிபூ, சோம்பு சேர்த்து தாளிக்கவும்.

(2)பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பப்பாளி சேர்த்து ஐந்து நிமிடம் வதக்கவும். இஞ்சி, பூண்டு விழுது, தக்காளி, கருவேப்பில்லை போட்டு சேர்த்து கிளறவும்.

(3)பின் மஞ்சள் தூள், சோம்பு தூள், சீரக தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கிளறி தேங்காய் பால் சேர்த்து இரண்டு நிமிடம் கழித்து தண்ணீர் தேவையான அளவு ஊற்றி நன்றாக கொதிக்கவிடவும்.

(4)கடைசியாக கொத்தமல்லி தூவி இறக்கவும்.

பப்பாளியின் பயன்கள்:

பப்பாளியில் ஆண்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இதனால் நோய் ஏற்படுத்தக் கூடிய நச்சுக் கிருமிகளை முற்றிலும் அகற்றும்.
விட்டமின் C, A, E சத்துகள் நிறைந்திருப்பதால் கண்களுக்கு நல்லது.
ஆஸ்துமா நோய் கொண்டவர்கள் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுவதால் அதன் அளவு குறைந்து கட்டுப்பாடாக இருக்கும்.
நார்ச்சத்து பப்பாளியில் இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.

Related Posts

Leave a Comment