வெண் பொங்கல் செய்ய சிறந்த முறை

by Web Team
0 comment

சிறந்த ஒரு காலை உணவு .மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து இரண்டும் கலந்த ஒரு பாரம்பரிய மிக்க காலை உணவு.

தேவையான பொருட்கள்

1. பொங்கல் பச்சரசி நொய் – 1 கப்

2. பாசி பருப்பு( உடைத்தது)- கால் பங்கு

3. நெய் – ஒரு குழி கரண்டி

4. கடலை எண்ணெய் – ஒரு குழி கரண்டி

5. சீரகம் – ஒரு தேநீர் கரண்டி

6. இஞ்சி நருக்கியது – ஒரு தேநீர் கரண்டி

7. பச்சை மிளகாயை – ஒரு தேநீர் கரண்டி

8. மிளகு – ஒரு தேநீர் கரண்டி.

9. நறுக்கிய கொத்தமல்லி – 1/2 கொத்து.

10. முந்திரி – 10

11. கருவேப்பிலை – 10

செயல்முறை

1.முதலில் பாசிபருப்பை வானலில் வாசம் வரும் வரை வறுத்து கொள்ளவும்.

2.பச்சரசி நொய் மற்றும் வறுத்த பருப்பை உற வைக்கவும் .

3. பிறகு குகுக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்றாக மசிய சமைக்கவும் .

4. நன்கு அரிசியும் பருப்பும் குழைந்தவுடன் தனியே வைக்கவும்.

5. வாணலில் எண்ணை மற்றும் நெய் சேர்த்து மீதமான சூட்டில் வைக்கவும் பிறகு சீரகம், மிளகு, இஞ்சி, கரு வெப்பில்லை, பச்சை மிளகாயை சேர்த்து எண்ணெயில் வதக்கவும் பிறகு வெந்த அரிசி பருப்பு சேர்த்து கலக்கவும் மிதமான சூட்டில் எண்ணை விடும் வரை வணக்கவும்.முந்திரி வறுத்து கொத்தமல்லி சேர்த்து சூடாக தேங்காய் சட்னி சேர்த்து பரி மாறவும்.

Related Posts

Leave a Comment