செங்கிழங்கின் பலன்கள் :
தினமும் செங்கிழங்கின் சாற்றினை பருகி வந்தால் உயர் இரத்த அழுத்தம் குறையும்.
இதில் உள்ள அல்ஃப ளிபொய்க் அமிலம் நீரிழிவு நோய்யை குணப்படுத்த உதவுகிறது.
அதிக நார் சத்து மலச்சிக்கலை போக்கி சீராக செரிமானம் நடைபெறும்.
மூளைக்கு செல்லும் இரத்தவோட்டத்தை அதிகரித்து ஞாபக சக்தியை அதிகரிக்கும்.
கோலைன் என்னும் ஊட்டச் சத்து கொழுப்பினை உறிந்து கொள்ளும் மேலும் வீக்கத்தினை குறைக்க உதவும்.
உங்கள் தினசரி செயல்திறனை அதிகரிக்கும்.
சிவப்பணுப் புரதத்தின் அளவினை அதிகப்படுத்தும்.
ஃபொலேட் தோலினையும் முடியினையும் நன்கு பராமரிக்கும் மற்றும் புண் ஆவதை தடுக்கும்.
ஃபொலிக் அமிலம் நிறைந்த செங்கிழங்கை கர்ப்பக் காலத்தில் உட்கொண்டால், பிறக்கும் குழந்தையின் இடையின் அளவு சரியான அளவில் இருக்கும். மேலும் பிறவியிலேயே வரும் இருதயக் கோளாறுகள் வராமல் தடுக்க முடியும்.
மாங்கனீசு உடலில் சிறிய அளவில் தான் இயற்கையாகவே இருக்கும் ஆனாலும் மிக மிக அவசியமான ஒன்று. இதனை அளிக்கும் செங்கிழங்கை உட்கொண்டால் குழந்தையின்மை, ஊனம், சோர்வு போன்றவற்றை தவிர்கக்கூடும்.
நாம் அன்றாடம் உண்ணும் உணவிலே எல்லா விதமான வியாதிகளை போக்கக்கூடிய மருந்துகளும் நிறைந்திருக்கிறது.
எனவே, உணவே மருந்து என்பதை உணர்ந்து எதனையும் புறம் தள்ளாது அதன் பலனைப் பெற்று ஆரோக்கியமான வாழ்வை சுதந்தரித்துக் கொள்வோம்.