பித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்ய புளி உபயோகிப்பது ஏன்?

by Web Team
0 comment

எந்த ஒரு உலோகமும், சில காலம் பயன்படுத்தியப் பிறகு காற்றுடன் ( ஆக்ஸிஜன்) வினை புரிந்து அந்த உலோகத்தின் ஆக்ஸைடு ஆக மாறுகிறது. பித்தளை என்பது காப்பர் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களின் கலவை ஆகும்.

எனவே, காற்றில் இவை வினைபுரிந்து இவற்றின் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. இதனால் அவற்றின் வெளிப்பகுதி துத்தநாக ஆக்ஸைடு மற்றும் தாமிர ஆக்ஸைடு ஆக மாறுகின்றன.

இந்த மாசுக்களை பாத்திரத்தின் வெளிப்பகுதியில் இருந்து நீக்கிவிட்டால் அந்தப் பாத்திரம் பழையப் பொலிவைப் பெறும். அதை நீக்குவதற்கு கரைப்பான் தேவை. அமிலங்கள் அரிக்கும் தன்மை கொண்டவை. எனவே சிட்ரிக் அமிலம், அசிட்டிக் அமிலம் ( வினிகர்), டார்டாரிக் அமிலம் போன்ற கரிம அமிலங்கள் கொண்டு தேய்க்கும்போது வேதிப்பிணைப்பு வலுவாக இல்லாத உலோக மாசுக்கள் பாத்திரத்தின் வெளிப்பகுதியில் இருந்து பிரிக்கப்பட்டு, நீருடன் கலந்துவெளியேறுகின்றன.

புளியில் தோராயமாக 20% டார்டாரிக் அமிலமும், சிட்ரிக் அமிலம், மலியிக் அமிலம் போன்றவை சற்று குறைந்த விகிதத்திலும் உள்ளன. எனவே புளியைப் பயன்படுத்தும்போது பித்தளைப் பாத்திரம் பொலிவுறுகிறது.

மாறாக கந்தக அமிலம், ஹைட்ரோகுளோரிக் அமிலம் போன்ற வலிமையான கனிம அமிலங்களைப் பயன்படுத்தினால் அவை பித்தளையையும் அரித்துப் பாத்திரத்தையே ஓட்டையாக்கி விடும். ஆகவே எலுமிச்சை, புளி போன்றவை சுத்தம் செய்ய ஏற்றவை.

Related Posts

Leave a Comment