அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் உதவியாளர்களில் ஒருவரான ஹோப் ஹிக்சுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ஆகியோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆனது. இதனையடுத்து, டிரம்ப் மற்றும் அவரது மனைவி ஆகியோர் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், மெலனியா டிரம்ப் இருவரும் கொரோனா பாதிப்பில் இருந்து விரைவில் குணமடைய விரும்புவதாக இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் கூறி உள்ளார்.
Wishing my friend @POTUS @realDonaldTrump and @FLOTUS a quick recovery and good health. https://t.co/f3AOOHLpaQ
— Narendra Modi (@narendramodi) October 2, 2020