தமிழகத்தின் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநர் கே.எஸ். பழனிசாமி சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில், அக்டோபர் 2-ந் தேதி (இன்று) காந்தி ஜெயந்தியன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று கிராமசபை கூட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டன. இதற்கான உத்தரவை அரசின் ஊரக வளர்ச்சி இயக்குனரகம், அனைத்து ஊரக உதவி இயக்குனர்களுக்கும் அனுப்பி உள்ளது.
கொரோனா பெருந்தொற்று பரவல் சூழ்நிலை காரணமாக கிராமசபை கூட்டங்கள் ரத்து செய்யப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடியாக இது குறித்த அனைத்து பஞ்சாயத்துக்களும் தகவல் தெரிவித்து கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை நிறுத்தும்படியும் அந்த உத்தரவில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.