வருடம் ஆகியும் பிக்பாஸ் ஊதியம் வரவில்லை – நடிகை காட்டம்

by Web Team
0 comment

பிரபல தமிழ் நடிகை கஸ்தூரி ஷங்கர், சமூக அவலங்கள் குறித்து அவ்வப்போது குரல் எழுப்புவார். அந்த வகையில், கடந்த ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் 3 வில் பாதியில் உள்ளே சென்று வனிதா விஜயகுமாருக்கு எதிராக பேசி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். உள்ளே சென்ற ஓரிரு வாரங்களிலேயே வெளியேற்றப்பட்ட கஸ்தூரிக்கு இன்னும் தனியார் தொலைக்காட்சி பேசிய தொகையை கொடுக்கவில்லை என ட்வீட் செய்துள்ளார்.
அதில், ஒரு வருடத்திற்கும் மேலாக என்னுடைய ஊதியத்தை கொடுக்காமல் வைத்திருக்கும் தொலைக்காட்சிக்கு நன்றிசொல்ல வார்த்தைகளே இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தான் பிக்பாஸ் நிகச்சியில் கலந்துகொண்டதே மனுமிஷன் குழந்தைகளின் ஆபரேஷன் செலவுக்காகத்தான் எனவும், இதற்குமுன்பே அந்த தெலைக்காட்சியின் எந்த பேச்சையும் தான் நம்பியதில்லை எனவும் அதில் கூறியிருக்கிறார்.

Related Posts

Leave a Comment