பிரியா பவானி சங்கருடன் காதலா?… ஹரிஷ் கல்யாண்

by Web Team
0 comment

“பியார் பிரேமா காதல்”, “இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்”, “தாராள பிரபு” போன்ற படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் ஹரிஷ் கல்யாண். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டவர். இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் நடிகை பிரியா பவானி சங்கரை காதலிப்பது போல் டுவிட் செய்திருக்கிறார்.

இதற்கு பிரியா பவானி சங்கரும், ‘லாக்டவுன் முடியுற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல. நான்தான் முதலில் சொல்ல நினைத்தேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதற்கு ஹரிஷ் கல்யாண், காத்திருக்க முடியாது! காத்திருக்க வேண்டாம்! நாளை மாலை 5 மணிக்கு நான் அதை அதிகாரப்பூர்வமாக்குகிறேன் என்று பதிவு செய்திருக்கிறார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் குழப்பம் அடைந்திருக்கிறார்கள். அனேகமாக நாளை மாலை 5 மணிக்கு படத்திற்கான அறிவிப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment