கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரை தவளை உடலில் செலுத்திலால் தவளை முட்டை இடுவது எப்படி சாத்தியமாகிறது?

by Web Team
0 comment

கர்ப்பிணி பெண்ணின் சிறுநீரை தவளை உடலில் செலுத்திலால் தவளை முட்டை இடுமா? இது என்ன புது கதையா இருக்கு? இப்படியெல்லாம் நடக்குமா? நடந்திருக்கிறது. வெளிநாட்டில் ஆய்வாளர் ஒருவர் இது பற்றி ஆராய்ச்சி செய்து இதனை சாத்தியம் செய்துள்ளார். இது எல்லா வகை தவளை இனத்திற்கும் பொருந்தாது. குறிப்பட்ட மரபணு கொண்ட தவளை இனத்திற்கு மட்டுமே இது சாத்தியம். குறிப்பாக தென் ஆப்பிரிக்கா தவளை.

இதற்கு காரணம் என்னவென்றால், HCG என்ற ஹார்மோன் தான். அதாவது தொப்புள் கொடி உருவாக காரணமான ஹார்மோன். இந்த ஹார்மோன் சிறுநீரில் இருக்கும். அப்போது அதனை எடுத்து பெண் தவளையின் உடலில் செலுத்தும் போது மாற்றம் ஏற்படுகிறது. ஏன் ஆண் தவளையின் விந்தணுவில் கூட மாற்றத்தை ஏற்படுத்தும்.

1920 களில் ஜெர்மனியில் எலிகளுக்கு இந்த சோதனை செய்யப்பட்ட போது தோல்வியே, பிறகு முயல்களுக்கு! இறுதியாக தவளைகளுக்கு கருவுற்ற மாட்டினுடைய சிறுநீர் செலுத்தும் போது அவை முட்டை இடுவதை கண்டறிந்தனர். பிறகு மனிதனது சிறுநீர் வைத்து சோதனை செய்துள்ளனர். இதனை கண்டறிந்தவர் Lancelot Hogben என்ற ஆய்வாளர். வியப்பான கண்டு பிடிப்புகளில் இதுவும் ஒன்று. இன்னும் எத்தனை அற்புதங்களை இயற்கை ஒளித்து வைத்திருக்கிறதோ?

Related Posts

Leave a Comment