21 வயது இளைஞனுக்கு 7 வயது சிறுமி மீது உருவான காதல் ஆனால் 14 வருடங்களுக்கு பிறகு நடந்தது?

by Web Team
0 comment

14 வருடங்கள் வித்தியாசம் இருந்தும், வெளிநாட்டை சேர்ந்த பெண்ணை கேரள இளைஞர் காதலித்து திருமணம் செய்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் மரியம் சோபியா லட்சுமி. இவர் 1988-ஆம் ஆண்டில் குடும்பத்தினருடன் இந்தியாவுக்கு வந்திருந்தார். அப்போது சோபியாவின் வயது ஏழு. இவர் கேரள மாநிலத்திற்கு சென்றபோது தன்னைவிட 14 வயது மூத்தவரான சுனில் என்பவர் மீது காதல் வயப்பட்டுள்ளார். சுனில் கிருஷ்ணர் வேடமணிந்து கதகளி நடனம் ஆடியபோது அவரை சோபியா முதன்முதலாக பார்த்துள்ளார். அதன்பின்னர் சுனில் அவர்களுடைய குடும்ப நண்பராக மாறினார்.

அதன் பின்னர் சோபியா குடும்பத்தினருடன் மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு சென்றுவிட்டார். 8 வருடங்கள் கழித்து பரதநாட்டியம் கற்றுக் கொள்வதற்காக சோபியா பிரான்ஸ் நாட்டிலிருந்து இந்தியா வந்தடைந்தார். அப்போது இருவரும் நன்றாக பேசி பழக தொடங்கியுள்ளனர். பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்த காதலுக்கு மரியம் வீட்டார் ஒப்புதல் தெரிவித்திருந்தாலும், சுனிலின் பெற்றோர் சற்று தயக்கத்துடனே காணப்பட்டனர்.

அவர்கள் எவ்வளவு முறை எதிர்த்தும், சுனில் இறுதிவரை காதல் மீது நம்பிக்கை இழக்கவில்லை. அதற்கு லட்சுமி இந்திய கலாச்சாரத்தின் மீதும், பாரம்பரியத்தின் மீதும் கொண்டிருந்த அதிக ஈடுபாடே காரணம் என்று தெரியவருகிறது. இருவரும் இணைந்தே பல மேடை நாடகங்களில் நடித்துள்ளதாகவும் தெரியவருகிறது. தற்போது வரை லட்சுமி 8 கேரள திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடைய காதல் கதையானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Posts

Leave a Comment